search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதரவின்றி உறவினர் வீட்டில் தங்கிய சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
    X

    ஆதரவின்றி உறவினர் வீட்டில் தங்கிய சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

    ராமநாதபுரம் மாவட்டம் அருகே ஆதரவின்றி உறவினர் வீட்டில் தங்கிய சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 2 சிறுமிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்தனர். இதனை பார்த்தவர்கள் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் 2 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதில் 15-வயது சிறுமி கர்ப்பமாக இருந்தார். அவரிடம் அமைப்பினர் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தனது உறவினர் தன்னை கட்டாயபடுத்தி கற்பழித்ததால் கர்ப்பமடைந்ததாக கூறினார்.

    பின்னர் இது குறித்து சிறுமி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது.

    எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை மீனவர் கிராமம். எனது தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தை குடிகாரர். எனது அக்காள் எங்களை பராமரித்து வந்தார். அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட தகராறால் என்னையும் எனது தங்கையையும் அதே பகுதியில் உள்ள எனது தாய் மாமா செல்வராஜின் வீட்டில் விட்டு விட்டு கோவைக்கு புறப்பட்டு வந்து விட்டார். நான் எனது மாமா வீட்டில் இருந்த போது மாமாவின் மகன் அருநேசன் என்னை பலமுறை கட்டாயபடுத்தி கற்பழித்தார். இதில் நான் கர்ப்பமானேன். இதனை தெரிந்து அவரது குடும்பத்தினர். என்னையும் எனது தங்கையையும் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு கையில் ரூ. 500 பணத்தை கொடுத்து வீட்டுக்கு வரக்கூடாது என கூறிவிட்டு சென்று விட்டனர்.

    பின்னர் நாங்கள் இங்கு புறப்பட்டு வந்து விட்டோம். எனவே என்னை கற்பழித்த அருநேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகா அளித்தார்.

    சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கட்டாயபடுத்தி கற்பழித்த அருநேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்பவம் நடந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இந்த வழக்கை மாற்றி அனுப்பி வைத்தனர். #tamilnews
    Next Story
    ×