search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலாறு காணாத வகையில் ரூ.86ஐ தாண்டியது பெட்ரோல் விலை - பொதுமக்கள் கடும் அவதி
    X

    வரலாறு காணாத வகையில் ரூ.86ஐ தாண்டியது பெட்ரோல் விலை - பொதுமக்கள் கடும் அவதி

    நாளொரு ஏற்றமும், பொழுதொரு உயர்வுமாக அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. #Petrolprices #dieselprices
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

    இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடு செய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

    கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து சென்னையில் ரூ.86.13 ஆக விற்பனையாகிறது.

    டீசல் விலையும் 10 காசுகள் உயர்ந்து, சென்னையில் ரூ.78.36 ஆகவும் விற்பனையாகிறது. இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
     
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் கார், லாரி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். #Petrolprices  #dieselprices
    Next Story
    ×