search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது - ஐகோர்ட் மதுரை கிளை
    X

    மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது - ஐகோர்ட் மதுரை கிளை

    மணல் திருட்டில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC #SandTheft
    மதுரை:

    தமிழகத்தில் அதிகரித்து வரும் மணல் திருட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், பாண்டியராமன் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கு ஒன்றில், மணல் திருட்டு குறித்து புதிய உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிறப்பித்துள்ளது.

    அதன்படி, மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க கூடாது எனவும், அபராதம் கட்டிவிட்டு எடுத்துச் செல்லவும் அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாட்டு வண்டியாக இருந்தாலும் கூட, மாடுகளை மட்டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வாகனங்களை ஒப்படைக்க கூடாது என, உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், மணல் திருட்டு மூலம் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகும் என வேதனை தெரிவித்துள்ளனர். #MaduraiHC #SandTheft
    Next Story
    ×