search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசுதேவநல்லூரில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு
    X

    வாசுதேவநல்லூரில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு

    வாசுதேவநல்லூரில் டெங்கு பரவாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 10 தெருக்கள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவ்வூரை சேர்ந்த 5 பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக தெரிகிறது.

    இதையடுத்து டெங்கு பரவாமல் இருப்பதற்கு கடந்த 3 நாட்களாக கலெக்டர் அறிவுரையின் பேரில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபூபக்கர், உதவி செயற்பொறியாளர் ஜோதிமுருகன், சங்கரன்கோவில் மண்டல சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் நளினி, வட்டார மருத்துவர் சாந்தி சரவணபாய், பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் லெனின் ஆகியோர் முன்னிலையில் ஒட்டுமொத்த டெங்கு தடுப்பு பிரிவு பணிவு முகாம் நடைபெற்றது.

    முகாமில் சிவகிரி, ராயகிரி, பண்பொழி, புதூர், வடகரை, கீழ்படுகை, அச்சன்புதூர், சாம்பவர் வடகரை, மணிமுத்தாறு, சுரண்டை, மேலகரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய டவுண் பஞ்சாயத்துகளின் செயல் அலுவலர்கள், சுரண்டை, குற்றாலம், கீழப்பாவூர், வடக்கு வள்ளியூர், சிவகிரி ஆகிய பேரூராட்சிகளின் உதவி பொறியாளர்கள், 108 மஸ்தூர் பணியாளர்கள், 137 துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களை கொண்டு ஒட்டு மொத்த தடுப்பு பிரிவு முகாம் நடந்தது.

    இதனை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். டவுண் பஞ்சாயத்து வார்டுகளுக்கு சென்று வாருகால் மற்றும் குடிதண்ணீர் போன்றவற்றினை ஆய்வு செய்தார். அப்போது அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சுகாதாரப் பணிகள் சரிவர நடைபெறுவதில்லை என புகார் செய்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். மேலும் அரசு அதிகாரிகளுக்கு சுகாதாரப் பணிகளை சிறப்பாக செய்யும்படி உத்தரவிட்டார்.

    கலெக்டரின் ஆய்வினை தொடர்ந்து சுகாதாரப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு செய்து டெங்கு தடுப்பு பணிகள் செய்யப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுரைபடுத்தப்பட்டது.
    Next Story
    ×