search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்- அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள்
    X

    மதுரை அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்- அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள்

    சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    மறைந்த முதல்வர் அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    மதுரை நகருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாம் அனைவரும் அ.தி.மு.க. இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். விரைவில் நடக்க உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வில் மட்டும் தான் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கும். கட்சிக்கு உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும். எனவே தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும்.

    கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மதுரையில் முதலில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30-ந் தேதி சென்னையில் நிறைவு விழாவாக நடக்கிறது.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், சோலைராஜா, பரவை ராஜா, கருப்பு சாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கம், முத்துவேல், வக்கீல்கள் தமிழ்செல்வன், ஏ.பி.பாலசுப்பிரமணி, பாஸ்கரன், கறிக்கடை கிருஷ்ணன், எம்.டி.ரவி, கஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் லட்சுமி, இந்திராணி, சண்முகவள்ளி, கலாவதி தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×