search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.2½ கோடியில் சாலை பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
    X

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.2½ கோடியில் சாலை பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.அனீஷ்சேகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரை:

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.அனீஷ்சேகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    வார்டு எண்.96 எஸ்.ஆர்.வி. நகர் குறுக்குத் தெரு, ஓம் சக்தி நகர் 4 வது மற்றும் 5 வது குறுக்குத் தெரு சூரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், வார்டு திருநகர் மண்டி தோப்பு முதல் மற்றும் குறுக்குத் தெரு, ஜோசப் நகர் 4-வது தெரு, நெல்லையப்பர் தெரு, அமலா கான்வென்ட் குறுக்குத் தெரு, காந்திஜி 5வது மற்றும் 6வது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.

    ஜோசப் நகர் 1 முதல் 4 வரை வரையுள்ள குறுக்குத் தெருக்கள், விளாச்சேரி சாலை மற்றும் குறுக்குத் தெருக்களில் ரூ.44.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், திருநகர் 1வது நிறுத்தம் முதல் 3வது நிறுத்தம் வரை சாலையில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் அகலப்படுத்தி தார் சாலை அமைப்பது தொடர் பாகவும், திருநகர் 3வது நிறுத்தம் முதல் 5 வது நிறுத்தம் வரை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் அகலப் படுத்தி தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், திருநகர் 5-வது நிறுத்தம் முதல் 7-வது நிறுத்தம் வரை ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் அகலப் படுத்தி தார் சாலை அமைப்பது தொடர்பாகவும், மகாலட்சுமி காலனியில் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது தொடர்பாகவும், கோவலன் நகர் ரமண கார்டன் பகுதியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை ஒர்க்ஷாப் சாலையில் உள்ள மாநகராட்சி பொது பண்டக சாலையில் ஆய்வு செய்து மாநகராட்சியில் வாங்கப்படும் பொருட்களின் இருப்பு பதிவேடு, பொருட்கள் உள்வரும் பதிவேடு, வெளி செல்லும் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளையும், பண்டக சாலையில் உள்ள பொருட்களையும் ஆணையாளர் அனீஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், உதவி ஆணையாளர் பிரேம்குமார், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×