search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த சிங்கமுக பூக்கள்
    X

    கொடைக்கானல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த சிங்கமுக பூக்கள்

    கொடைக்கானல் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிங்க முக பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் அனைவரும் விரும்பி செல்வது ஏரிக்கு அடுத்தபடியாக பிரையண்ட் பூங்கா ஆகும். இங்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல்வேறு வகையான மலர்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் செட்டியார் பூங்காவிலும் பல வண்ண மலர்கள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. அதில் உள்ள அழகு மற்றும் வசீகரத்தை கண்டு சுற்றுலா பயணிகள் மனம் லயித்து செல்கின்றனர். பூக்களின் அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

    சிங்க முக வடிவில் காணப்படும் பூக்களும் பைன் சிட்டியா மலர்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், இயற்கை எழில் சூழ்ந்த கொடைக்கானலில் மலை களையும், மேகங்களையும், உயரமான பாறைகளையும் கண்டு ரசிப்பதோடு அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் மலர்கள் மீது அனைவருக்கும் தனி பிரியம் உண்டு. அந்த வகையில் பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிங்க முக பூக்களும் செட்டியார் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பைன் சிட்டியா பூக்களும் மிகவும் கவர்ந்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்த நிலையில் அவர்கள் அனைவரையும் இந்த பூக்கள் கவர்ந்துள்ளது என்றனர்.

    Next Story
    ×