search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் கனவு பலிக்காது - கோகுல இந்திரா
    X

    அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் கனவு பலிக்காது - கோகுல இந்திரா

    அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் கனவு பலிக்காது என்று பெரம்பூரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார். #GokulaIndira #ADMK
    அம்பத்தூர்:

    வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர் தொகுதி 70-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயஸ்ரீமகேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் பெரம்பூர் ஆர்.மகேஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் இரா.வீரமணி முன்னிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரம்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தார்மீக உரிமை அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு.

    முதல்-அமைச்சர் பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின் முதல்வர் மடியில் கனம் இல்லாததால் தான் ஊழல் தடுப்பு பிரிவை ஸ்டாலின் புகார் குறித்து முழுமையாக விசாரிக்க சொல்கிறார். அண்ணா சொன்னது போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அ.தி.மு.க.வினர் எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் சட்டபடி சந்திப்போம்.

    அம்மா அவர்கள் உயிரை கொடுத்து ஏற்படுத்தி விட்டுசென்ற ஆட்சியை கழகத்தை அழிக்க தினகரன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அம்மாவின் கழகத்தை அழிக்க நினைக்கும் டி.டி.வி.தினகரன் கனவு ஒரு காலமும் பலிக்காது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். என்ற இரு துருவங்களை கொண்டு வெற்றி மேல் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் டி.ஜி.வெங்கடஷ்பாபு எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் கோவிந்தசாமி, பி.எம்.மூர்த்தி எம்.குமார், நிர்வாகிகள் ரவிந்திரஜெயின், புண்ணியகோட்டி, எஸ்.எஸ்.கோபால், புரசை சீனிவாசன், மைதிலி, வி.எம்.ஜி.முகுந்தன், இளைய கிருஷ்னன், எம்.பி.பரமகுரு, பி.ஜீவா, பே.சு.நவமனியன், வி.சி.ஜெகன், சுப்புரு, பி.எம்.ரமேஷ்குமார், சு.அறிவழகன், அப்துல்வ ஹாப், நிரஞ்சன், ஆர்.ஹரேஷ்.

    புருசோத்தமன், ஆர்.யுவராஜ், ஆவின் சேகர், அருணா, பாக்கியலட்சுமி, லட்சுமிபாய், அந்தோணியம்மாள், பக்தா, எடைகுமார், பாகுலேயன், அமுல், நூர்ஜஹான், ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பகுதி இணை செயலாளர் எம்.ரபி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தினகரன் அணியில் இருந்து விலகி 70 வது வட்ட நிர்வாகி நீலகண்டன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். #GokulaIndira #ADMK

    Next Story
    ×