search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே 18-ம் கால்வாயில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்
    X

    தேனி அருகே 18-ம் கால்வாயில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்

    தேனி அருகே 18-ம் கால்வாயில் மணல் கடத்திய சரக்கு வாகனம், மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    முல்லை பெரியாற்றில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்தது. மேலும் ராட்சத பள்ளங்கள் தோண்டியதால் நீர்வரத்து உள்ள சமயங்களில் சுழலில் சிச்கி உயிரிழப்புகளும் அதிகரித்தது. எனவே மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் நேற்று நள்ளிரவு 18-ம் கால்வாய் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது முல்லை பெரியாற்றில் இருந்து மணல் கடத்தி சரக்கு வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் ஏற்றி வந்தனர்.

    அதிகாரிகளை கண்டதும் வாகனங்களில் வந்தவர்கள் அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவற்றை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டுவரப்பட்டது. மேலும் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    Next Story
    ×