search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் எஸ்பி அலுவலக பெண் அதிகாரிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை-பணம் திருட்டு
    X

    நாகர்கோவில் எஸ்பி அலுவலக பெண் அதிகாரிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை-பணம் திருட்டு

    நாகர்கோவிலில் எஸ்பி அலுவலக பெண் அதிகாரிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் முதியோரிடம் நூதன முறையில் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    அந்த வகையில் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக பெண் அதிகாரி ஒருவரும் நகை, பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்விபரம் வருமாறு:-

    நாகர்கோவில் கோட்டார், பட்டசாலியன் விளையை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்தி (வயத 52). நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    வசந்தி நேற்று முன்தினம் வீட்டு செலவுக்கு பணம் எடுக்க கோட்டார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மையத்திற்கு சென்றார். அங்கு பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தவர் வடிவீஸ்வரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.

    இதற்காக அவர் பஸ் நிறுத்தப் பகுதிக்கு சென்றார். அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அந்த பெண், வசந்தி அருகே சென்று நைசாக பேச்சு கொடுத்தார். அவரிடம் தனக்கும் வடிவீஸ்வரம் செல்ல வேண்டும், இருவரும் பேசிக்கொண்டே செல்வோமா? என்று கேட்டார்.

    தோழி போல அந்த பெண் பேசியதில் மயங்கி போன வசந்தி, அவருடன் சேர்ந்து செல்ல சம்மதித்தார். இருவரும் பேசிக்கொண்டே வடிவீஸ்வரம் சென்றனர்.

    மாடசாமி கோவில் அருகே சென்றதும், அந்த பெண், வசந்தியிடம் கால் வலிக்கிறது, கோவில் நிழலில் சற்று அமர்ந்து செல்வோம் என்றார். வசந்தியும், சரி என சொல்லி அமர்ந்ததும், அந்த பெண், வசந்தி வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கேட்டு வாங்கி குடித்தார்.

    அதன்பின்பு வசந்தியிடமும், தண்ணீர் குடிக்கும்படி கூறினார். வசந்தி தண்ணீர் குடித்த மறுவினாடி, அவர் மயக்க நிலைக்கு ஆளானார்.

    அதன்பின்பு வசந்தி கண்விழித்து பார்த்த போது, அருகில் இருந்த பெண்ணை காணவில்லை. மேலம் அவர் அணிந்திருந்த வளையல், கம்மல், செயின் என 3 புவுன் நகையும், பர்சில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    வசந்தியுடன் வந்த பெண், தண்ணீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து வசந்தியின் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    வசந்தியிடம் நூதன முறையில் நடந்த இத்திருட்டு குறித்து அவர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வசந்தியும், அந்த பெண்ணும் நடந்து வந்த சாலையில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அந்த பெண்ணை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×