search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளர் கார் திருட்டு - முகமூடி கும்பல் கைவரிசை
    X

    திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளர் கார் திருட்டு - முகமூடி கும்பல் கைவரிசை

    பனியன் நிறுவன மேலாளர் காரை முகமூடி கும்பல் திருடி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    சேலத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மனைவி சல்மா. இவர்கள் திருப்பூர் ராக்கியா பாளையம் சொர்ணபுரி பகுதியில் வசித்து வருகிறார்கள். நவ்ஷாத் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    வாரம் ஒரு முறை இவர் குடும்பத்துடன் சேலம் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 14-ந் தேதி நவ்ஷாத் குடும்பத்துடன் சேலம் சென்றார். இன்று காலை அவர் திருப்பூர் வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் முன் புறம் நிறுத்தப்பட்டு இருந்த காரை காணவில்லை.

    நவ்ஷாத் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது. மேலும் அங்கிருந்த லேப்டாப்பும் திருட்டு போய் இருந்தது. இது குறித்து நவ்ஷாத் அனுப்பர் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    நவ்ஷாத் வீட்டின் முன் பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 1.40 மணிக்கு முகமூடி அணிந்த 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்வதும், அங்கிருந்த கார் சாவியை எடுத்து கொண்டு காரை திருடி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    கார் பதிவெண் குறித்து திருப்பூர், பெருந்துறை டோல் கேட் மற்றும் ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
    Next Story
    ×