search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி லாட்டரி சீட்டு தயாரித்து விற்றதில் தலைமறைவாக இருந்த அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது
    X

    போலி லாட்டரி சீட்டு தயாரித்து விற்றதில் தலைமறைவாக இருந்த அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது

    போலி லாட்டரி சீட்டு தயாரித்து விற்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வந்த அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரத்தில் ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் கோரிமேடு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போலி லாட்டரி சீட்டுகள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பிரிண்டர்கள், லேப்-டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலி லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்ரீராம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

    இந்த சமூக விரோத தொழிலில் தொடர்புடைய குண்டு பாளையத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் ராதா (42), குயவர் பாளையத்தை சேர்ந்த எம்ப்ளாய்மென்ட் ரமேஷ் (42), திலாஸ்பேட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் (42) ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் நேற்று தலைமறைவாக இருந்து வந்த பொதுப்பணித்துறை ஊழியர் ராதா உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×