search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிள் பொதுமேலாளர் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் - நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
    X

    ஆப்பிள் பொதுமேலாளர் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் - நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு

    பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய ஐபோன் மற்றும் இழப்பீடு வழங்காத புகாரில், ஆப்பிள் நிறுவன பொதுமேலாளர் உள்பட 5 பேருக்கு நெல்லை நுகர்வோர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #Apple #iPhone #NellaiConsumerCourt
    நெல்லை:

    நெல்லையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆப்பிள் ஐபோன் ஒன்றை சில மாதங்களுக்கு முன் வாங்கினார். ஆனால், மொபைல் அதிகளவில் சூடானதால் மொபைலை சரி செய்யுமாறு சர்வீஸ் சென்டரிடம் கொடுத்து இருந்தார். 

    ஆனால், பல்வேறு காரணங்களை கூறி போனை சரி செய்யாமல்  காலம் தாழ்த்தி வந்து இருக்கிறார். பலமுறை சர்வீஸ் சென்டர் சென்றும் உரிய பதிலளிக்காமல்  நிர்வாகம் அலைக்கழித்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளித்தார்.

    கடந்த ஜூன் மாதம் வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு புதிய ஆப்பிள் ஐபோன் மற்றும் நஷ்ட ஈடாக ரூ.9ஆயிரம் வழங்குமாறு செல்போன் நிறுவனத்திற்கு உத்தரவி்ட்டார். ஆனால், இந்த உத்தரவை செல்போன் நிறுவனம் பின்பற்றவில்லை. இதனை அடுத்து மீண்டும் செந்தில் குமார் கோர்ட்டை நாடினார்.

    இன்று அவரது புகார் மனுவை விசாரித்த நெல்லை நுகர்வோர் கோர்ட், ஆப்பிள் நிறுவன பொதுமேலாளர் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 
    Next Story
    ×