search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை- தம்பிதுரை பேட்டி
    X

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை- தம்பிதுரை பேட்டி

    பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு எருதுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணி என்பது கிடையாது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து இருந்தால் ஜி.எஸ்.டி. முத்தலாக் ஆகிய சட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டோம்.

    ஆனால் தி.மு.க.தான் எப்படியாவது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க துடிக்கிறது. அதற்காகத்தான் அமித் ஷாவை அழைத்து வர திட்டமிட்டனர்.

    அ.தி.மு.க.வில் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் பேசுவது என்னுடைய சொந்த கருத்து. அ.தி.மு.க. 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது, கூட்டணி வைத்து அல்ல. ஜெயலலிதா வழியை தான் பின்பற்றி உள்ளோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல.


    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக எந்த சட்டச்சிக்கலும் இல்லை. ஆகையால் ஆளுனர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.

    துமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்பது இல்லை. நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் மக்களவை துணை சபாநாயகர்என்ற முறையில் நானும் மத்திய அரசிடம் பேசியுள்ளேன்.

    அ.தி.மு.க. சட்ட விதிகள் திருத்தம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அ.தி.மு.க. ஆகியவை எங்களிடம் உள்ளது. அந்த நிலை எப்போதும் தொடரும். தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk

    Next Story
    ×