search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை நள்ளிரவு முதல் குளிர்வித்து வரும் மழை
    X

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை நள்ளிரவு முதல் குளிர்வித்து வரும் மழை

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து குளிர்வித்து வருகிறது.#ChennaiRains
    சென்னை:

    சென்னையில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது. 

    இதற்கிடையே, நேற்று பிற்பகல் 3 மணியில் இருந்து தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
     
    குறிப்பாக, எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தட்பவெப்ப நிலையில் இருந்த வெப்பம் மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRains
    Next Story
    ×