search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
    X

    கோத்தகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

    பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோத்தகிரியில் நேற்று நடைபெற்றது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோத்தகிரியில் நேற்று நடைபெற்றது. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

    என்.பி.ஏ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய போட்டியை, கல்லூரி முதல்வர் ஆல்பிரட் எபினேசர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    Next Story
    ×