search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்யும் கும்பல்
    X

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்யும் கும்பல்

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் பெரும்பாலும் விவசாய கூலித் தொழி லாளர்களே உள்ளனர். வாரம் மற்றும் மாதக்கூலி பெறும் இவர்கள் சேமிக்க வங்கிகளை நாடிச் செல்வதில்லை. மேலும் ஒரு சில விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறையே காய்கறிகளை விற்று பணம் சம்பாதிக்க முடியும்.

    எனவே தங்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைப்பதற்காகவும், நகைகள் வாங்கவும் சீட்டு போட்டு வருகின்றனர். இதனை ஒரு சில மோசடி கும்பல் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இது போன்ற ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களை குறி வைத்து குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டுகின்றனர். இதனை நம்பும் ஏழை விவசாயிகள் நகைகள் வாங்குவதற்கு சீட்டு போட்டு வருகின்றனர்.

    இந்த கும்பல் முறையாக பதிவு செய்யப்படாமல் பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கிராம பகுதி என்பதால் இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே கிடையாது.

    இந்த மோசடி கும்பல் அவர்களிடம் பணத்தை நல்லவர்கள் போல் வசூல் செய்து சில மாதங்களில் தலை மறைவாகி விடுகின்றனர். இதனால் சேமித்த பணம் ஏமாற்றப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதன் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை முடிவு எடுக்கின்றனர். எனவே போலீசார் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி அனுமதி இல்லாமல் சீட்டு நடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு வங்கியில் மட்டும் சேமிப்புகளை வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×