search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் 2-வது மாடியில் இருந்து குதித்து கோவை பெண் தற்கொலை முயற்சி
    X

    சென்னை விமான நிலையத்தில் 2-வது மாடியில் இருந்து குதித்து கோவை பெண் தற்கொலை முயற்சி

    சென்னை விமான நிலையத்தில் 2-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    கோவையை சேர்ந்தவர் கவிதா (வயது 37). இவர் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவிதா சென்னை வந்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

    அப்போது கவிதா பாதி மயக்கத்தில் இருந்தார். இதனை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். இதற்கு அவரால் சரிவர பதில் கூற முடியவில்லை.

    இதையடுத்து கவிதாவின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து திருப்பி அனுப்பினர். இதனால் கோபம் அடைந்த கவிதா, சர்வதேச விமான முனையத்தில் 2-வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிக்கு சென்றார். திடீரென அவர் அங்கிருந்து கீழே குதிக்க போவதாக சத்தமிட்டு குதிக்க முயன்றார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயணிகள் கவிதாவை தடுத்து மீட்டனர்.

    அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கவிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து உள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவர் அடிக்கடி சென்னை வரும்போது நட்சத்திர ஓட்டலில் தங்குவது வழக்கம். சம்பவத்தன்று கவிதா விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பு ஓட்டலில் இருந்து புறப்படும் போதே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று உள்ளார். இதனால் அவர் மயக்கம் அடைந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கவிதா தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×