search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் விநாயகர் சிலையை கரைக்க 120 அடி நீள சினிமா டிராலி
    X

    மாமல்லபுரத்தில் விநாயகர் சிலையை கரைக்க 120 அடி நீள சினிமா டிராலி

    மாமல்லபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி முதன் முதலாக சினிமா படப்பிடிப்பில் பயன் படுத்தும் 120 அடி நீள டிராலியை வைத்து சிலைகளை கரைக்க உபயோகப்படுத்தினர். #VinayagarChathurthi

    மாமல்லபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டடு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 156 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே பக்தர்கள் விநாயகர் சிலைகளை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதன் முதலாக சினிமா படப்பிடிப்பில் பயன் படுத்தும் 120 அடி நீள டிராலியை சிலைகளை கரைக்க உபயோகப்படுத்தினர். கடற்கரைக்கு கொண்டு வரும் விநாயகர் சிலைகளை டிராலியில் வைத்து தள்ளி கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர். கடந்த ஆண்டுகளில் விநாயகர் சிலைகளை கொண்டு வருபவர்கள் அதனை கரைக்க கடற்கரையில் இருந்து 200 அடி தூரத்துக்கு தூக்கிச் செல்லும் நிலை இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்படுவதுடன் கடலுக்குள் தவறி விழுந்து காயங்கள் ஏற்படும் நிலையும் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜி உத்தரவின் பேரில் சிலைகளை கடற்கரை வரை பக்தர்கள் எளிதாக கொண்டு செல்ல சினிமா ஆர்ட் டைரக்டர் ராஜா, பிரபு ஆகியோரின் மேற் பார்வையில் 14 ஊழியர்கள் பணிபுரியும் 120 அடி நீள முள்ள சினிமா படப்பிடிப்பு டிராலி முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×