search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் முக ஸ்டாலினுக்கு தினகரன் துணை போகிறார்- காமராஜ் பேச்சு
    X

    முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் முக ஸ்டாலினுக்கு தினகரன் துணை போகிறார்- காமராஜ் பேச்சு

    முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தினகரன் துணை போகிறார் என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkamaraj #mkstalin #dinakaran

    திருவாரூர்:

    திருவாரூரில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட் ட பொருளாளர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, ரெயில் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    அ.தி.மு.க அரசு மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்று முழக்கமிட்டார். அதனை நனவாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். சத்துணவு தந்து குழந்தைகளின் பசியை போக்கினார். அடுத்து முதல்வராக வந்த ஜெயலலிதா விலையில்லா அரிசியை வழங்கி மக்களின் பசியை போக்கினார்.

    இப்படி எண்ணற்ற திட்டங்களை தந்த அ.தி.மு.க மட்டுமே அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் முழு தகுதியை பெற்றுள்ளது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வர் பதவிக்கு வந்து விடலாம் என தி.மு.க . தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டார். இதற்காக பல தவறான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவருடைய முயற்சிக்கு டி.டி.வி. தினகரன் துணையிருந்து வருகிறார்.


    தி.மு.க. நினைப்பதை நடத்தி காட்டுவதற்கு தினகரன் தொடர்ந்து துணை போகிறார். தி.மு.க .எத்தனை துரோகிகளை அழைத்துக் கொண்டு வந்தாலும் அ.தி.மு.க.வை ஒருகாலும் வெல்ல முடியாது. தமிழகத்தில் இன்னும் மூன்றாண்டுகளை அ.தி.மு.க. ஆட்சி நிறைவு செய்யும். இதனை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியை எதிர்வரும் மூன்றாண்டுகளில் சிறப்பான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அதிமுகவால் மட்டுமே முடியும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

    கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கலியபெருமான், விஜய ராகவன், பாப்பாத்தி மணி, சூரியசாமி, கூரியர் மதிவாணன், சின்னராஜ், எம்.ஜி.ஆர். கருப்பையன், குருசாமி, துரை, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். #ministerkamaraj #mkstalin #dinakaran

    Next Story
    ×