search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி பஸ் நிலையத்தில் சந்தை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு - வேறு இடம் ஒதுக்கியும் செல்ல மறுப்பு
    X

    சாயல்குடி பஸ் நிலையத்தில் சந்தை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு - வேறு இடம் ஒதுக்கியும் செல்ல மறுப்பு

    வாரச்சந்தை பஸ் நிலையம் வரை ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க வாரச்சந்தையை இடம் மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாயல்குடி, செப். 15-

    சாயல்குடியில் வாரச்சந்தை ஒவ்வொரு சனிக் கிழமையும் நடைபெற்று வருகிறது. சாயல்குடி பஸ் நிலையத்திற்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இடையே சந்தை நடை பெற்று வருகிறது.

    வளர்ந்து வரும் நகரமான சாயல்குடியில் வாரச் சந்தையில் அதிகமான வாடிக்கையாளர்கள் கூடுவதாலும், மிக அதிகமாக வெளியூர் வியாபாரிகள் கடை அமைப்பதாலும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கருதி சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையே வாரச் சந்தைக்காக இடம் ஒதுக்கி தீர்மானம் இயற்றினர். எனினும் இத்தீர்மானம் ஏட்டளவிலேயே உள்ளது.

    அங்கு பேரூராட்சி நிர்வாகத்தினரால் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டும் வாரச்சந்தையை மாற்ற வியாபாரிகள் மறுத்து சாயல்குடி பேருந்து நிலையம் அருகிலேயே வாரச் சந்தையை இயக்கி வருகின்றனர்.

    இங்கு போதுமான இடவசதி இல்லாததால் பஸ்கள் நிற்கும் இடம் வரை கடைகளை பரப்பி வைக்கின்றனர்.

    பஸ்கள் முன்பின் இயக்கும் பொழுது விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையையும் ஆக்கிரமித்து வாரச்சந்தை கடையை விரித்து வியாபாரம் செய்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு சாயல்குடியில் வாரச்சந்தை அமைவிடத்தை மாற்றிய மைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×