search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு சொத்துகளை மறைத்த வழக்கு - ப.சிதம்பரம் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு
    X

    வெளிநாட்டு சொத்துகளை மறைத்த வழக்கு - ப.சிதம்பரம் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு

    வெளிநாட்டு சொத்துகளை மறைத்த வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்ததை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்துகள் வாங்கியதை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியது.

    பின்னர். அவர்கள் 3 பேர் மீதும் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் கோர்ட்டில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செப்டம்பர் 14-ந் தேதி (அதாவது நேற்று வரை) நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்ததை அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். #PChidambaram
    Next Story
    ×