search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் குப்பை கிடங்கை விரைந்து கட்டி முடிக்க கோரிக்கை
    X

    வேதாரண்யத்தில் குப்பை கிடங்கை விரைந்து கட்டி முடிக்க கோரிக்கை

    வேதாரண்யத்தில் குப்பை மறு சுழற்சி கிடங்கை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 21 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை கடற்கரைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பிற்கு அருகில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.

    நாள்தோறும் குப்பைகளை கொளுத்திவிடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. இந்த குப்பை கிடங்கை மாற்றி கடற்கரை அருகே ரூ.2 கோடி செலவில் குப்பைகள் மறு சுழற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இதை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இந்த குப்பை மறு சுழற்சி கிடங்கை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பழைய இடத்தில் உள்ள குப்பைகளை மறு சுழற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தற்போது உள்ள குப்பை கிடங்கு அருகே 4 சுடுகாடுகள் உள்ளன. அதனையும் புதிதாக கட்ட வேண்டும். அதேபோல் தற்போது அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் பொது தகன மேடையும் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×