search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    திருச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

    திருச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி திண்ணியம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். இவரது மனைவி சாந்தி (வயது 40) விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியில் பொருட்களை வாங்கி விட்டு நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மாந்துறை அருகே சென்ற போது அங்குள்ள டெப்போ முன்பு திடீரென பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் இருந்த வாலிபர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பிடித்து இழுத்து பறிக்க முயன்றான்.

    அப்போது சாந்தி அவர்களுடன் போராடியதால் நிலை குலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து ரோட்டில் விழுந்தார். இதை பார்த்ததும் செயின் பறிப்பு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

    பைக்கில் இருந்து கீழே விழுந்த சாந்திக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் போராடி செயினை திருடர்களிடம் பறிகொடுக்காமல் காப்பாற்றிக் கொண்டார்.

    இந்நிலையில் திருச்சி ஏர்போர்ட் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் கீதா (52) நேற்று முன்தினம் செல்போன் பேசிக் கொண்டு வீட்டின் அருகே நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி விட்டான். இது குறித்து கீதா ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார்.

    ஏர்போர்ட், லால்குடியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இரவில் ஒரே நாளில் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போயின.

    ஸ்ரீரங்கம், காந்தி மார்க் கெட், கண்டோன்மெண்ட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் பைக் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இதுவரை 25 மோட்டார் சைக்கிள்கள் மாநகரில் மட்டும் திருடப்பட்டுள்ளது.

    திருச்சியில் செயின் பறிப்பு திருடர்கள், மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கியிருப்பது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளி வந்துள்ள திருட்டு ஆசாமிகள் திருச்சியில் கைவரிசை காட்ட தொடங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×