search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் இடி-மின்னலுடன் திடீர் மழை
    X

    திருச்சியில் இடி-மின்னலுடன் திடீர் மழை

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட துறையூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதம் கோடை வெயில் சுட்டெரிப்பது போல தற்போது வெயில் சுட்டெரிக்கிறது.

    கடந்த சில நாட்களாக திருச்சியில் 39 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தினமும் 105 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எப்போது மழை வரும் என்று ஏங்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் திருச்சி மாநகரில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே பகல் 5 மணியளவில் திடீரென திருச்சி மாநகரில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட துறையூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இரவு வரை இடியுடன் மின்னல் தாக்கியது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்த நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையால் மாநகர் மற்றும் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவாகியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது.

    Next Story
    ×