search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள் - கலெக்டர் மலர்விழி தகவல்
    X

    தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள் - கலெக்டர் மலர்விழி தகவல்

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழிகள் அமைக்க வேண்டும்.

    மின்சார விளக்குகளை மட்டும் கடையில் பயன்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபடத்தின்-2 பிரதிகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வாடகை கட்டிடமாக இருந்தால் நோட்டரி வக்கீலிடம் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிம கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அதற்கான அசல் சலானுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து படிவம் 5-ல் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×