search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் மாணவிகளையும் விட்டு வைக்காத செல்பி மோகம்
    X

    திண்டுக்கல்லில் மாணவிகளையும் விட்டு வைக்காத செல்பி மோகம்

    திண்டுக்கல்லில் ஆபத்தை உணராமல் ஆன்லைன் சவாரியிலேயே செல்பி எடுக்கும் மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஆபத்தை உணராமல் ஆன்லைன் சவாரியிலேயே செல்பி எடுக்கும் மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விபரீத விளையாட்டுகளில் பங்கேற்பது என்றால் மாணவ-மாணவிகளுக்கு அலாதி பிரியம். குறிப்பாக செல்போனில் வரும் பல வித விளையாட்டுகளில் அதன் விபரீதம் தெரியாமல் கலந்து கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு.

    குறிப்பாக ஆனந்தமாக எடுக்கும் செல்பி போட்டோக்கள் கூட அவர்களின் உயிருக்கே உலை வைக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இதனால் தான் மலைப் பாங்கான இடங்கள், அருவிகள், நீரோடைகள், ஆறுகள் அருகில் செல்பி எடுக்க தடை விதிக்கின்றனர். இது தவிர வாகனங்களில் செல்லும் போது செல்பி எடுத்து அதனை தங்கள் ஸ்டேட்டசில் போடுவதை பெருமையாக நினைக்கின்றனர்.

    இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மாணவிகளும் கடைபிடித்து வருகின்றனர்.

    பைக்கில் செல்லும் போதே செல்பி எடுத்து தங்களது ஸ்டேட்டசாக போட்டு வருகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல் ஆபத்தன பயணம் செய்கின்றனர்.

    போக்குவரத்து போலீசார் பொதுவாக மாணவிகள், இளம்பெண்கள் என்றால் அவர்களிடம் கெடுபிடி காட்டாமல் விட்டு விடுகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பைக்கில் செல்லும் போதே செல்பி எடுத்து செல்கின்றனர்.

    18 வயதுக்கு குறைவான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லைசென்ஸ் கூட இருக்காது. இது போன்ற நபர்கள் பைக்கில் சென்றாலே அவர்களை பிடித்து போலீசார் அவர்களது பெற்றேரை வரவழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். இல்லையெனில் செல்பி மோகத்தில் வாகனங்களில் சுற்றும் மாணவிகளால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும்.
    Next Story
    ×