search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சோலார் மின் உற்பத்தி நிலையம்
    X

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சோலார் மின் உற்பத்தி நிலையம்

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சோலார் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது.
    வேலாயுதம்பாளையம்:

    உலகில் மின் ஆற்றல் பற்றாக்குறையை சமாளிக்கும் தீர்வில் சூரியசக்தி உள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரி சக்தி ஆதாரங்களின் ஒன்றாகும்.

    மேலும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலால் சுற்றுச்சூழலில் எந்த ஒரு எதிர் மறையான விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பதை வலியுறுத்தி எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் செயலர் முனைவர் ராமகிருஷ்ணன் 250 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்தினை கல்லூரி வளாகத்தில் துவக்கி வைத்தார்.

    மேலும் இத்திட்டம் பற்றி அவர் கூறும்போது, இந்த சோலார் மின் உற்பத்தியினை ஆன்லைன் மூலமாக கண்காணிக்க முடியும் கல்லூரியின் மின் பயன்பாட்டில் 50 சதவீதம் இத்திட்டத்தின் மூலம் ஈடுக்கட்டப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களது திறனாய்வு பயிற்சிக்கு இத்திட்டத்தினை உபயோகிக்க துறைத்தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

    லெனின் மின் உற்பத்தி பற்றிய செயல்முறை விளக்கத்தை அளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ்பாபு, கல்லூரி மேலாளர் பிரபு மற்றும் துறைத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×