search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.3 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி- எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்
    X

    ரூ.3 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி- எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்

    வேப்பந்தட்டை அருகே தார்சாலையை சீரமைக்க சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரில் இருந்து பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கொட்டாரக்குன்றுக்கு சுமார் 8 கி.மீ தார் சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த சில மாதங்களாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த தார்சாலையை சீரமைக்க சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

    விழாவிற்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்து பேசும் போது, இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மலைவாழ் மக்கள் என்பதால் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்படுகிறது. தற்போது இந்த சாலை பழுதடைந்துள்ளது தெரிந்தவுடன் சாலை சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் தொடங்கியுள்ளது, இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து எளிமையாக்கப்படும் என்றார்.

    விழாவில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அவைத்தலைவர் துரை, இணை செயலாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×