
சுவாமிமலை:
மலேசியா கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரைக்காவூர் (வயது 53). இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்தார்.
அவர் சுவாமிமலையை அடுத்த சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது நண்பரின் தங்கை செல்வி என்பவரது வீட்டில் தங்கி சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரைக்காவூர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இவர் மலேசியாவில் பிரபல தொழிலதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.