search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் சிகிச்சை
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் சிகிச்சை

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கோவை, திருப்பூரை சேர்ந்த 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் பகலில் வெயிலும், இரவில் கடுமையான பனிப்பொழிவும் இருந்து வருகிறது.

    இந்த மாறுபட்ட காலநிலையால் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாறுபட்ட காலநிலையால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி தற்போது டெங்கு காய்ச்சல் கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கோவையை சேர்ந்த 4 பேரும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதே போல கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும், எலி காய்ச்சலுக்கு ஒருவரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


    Next Story
    ×