search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கிறது, பணம் இல்லையே- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
    X

    பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கிறது, பணம் இல்லையே- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    பெட்ரோல் விலையை அரசுக்கு குறைக்க மனம் இருப்பதாகவும், ஆனால் அதற்கான பணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #PetrolDieselPriceHike
    சென்னை:

    சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் கூறியதாவது:-

    சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.


    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அதிமுக அரசுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அவர்களை விடுதலை செய்யும் விஷயத்தில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் ஸ்டாலின் வலியுறுத்த தயாரா? விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று ஸ்டாலின் கூறவேண்டும்.

    பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிக்கொண்டே போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் போதிய நிதி இலலை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால் விலையை குறைக்க குறைக்க முடியும்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #PetrolDieselPrice
    Next Story
    ×