search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

    புதுக்கோட்டை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்திற்குட்பட்ட கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

    புதுக்கோட்டை நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி, பிருந்தாவனம், டி.வி.எஸ். கார்னர் ஆகிய இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஓட்டல்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இருப்பினும் பஸ் நிலையங்களுக்கு குறைவான பயணிகளே வந்திருந்தனர். 50 சதவீத ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை. புதுக்கோட்டை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பஜார் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடின.

    இந்தநிலையில் பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக் கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் -தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீன வர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் அளவுக்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆட்டோக்கள், லாரிகள் இயங்க வில்லை. சரக்குகள் ஏற்றி செல்ல முடியாததால் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கொசு வலைகள், சிமெண்ட், காகிதம், முருங்கைக்காய், ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராஜூ கூறுகையில், எங்களது பேரமைப்பு சார்பில் கடையடைப்பு தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. ஆனால் கோரிக்கைக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கரூர் உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கின.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் ஒரு சில மட்டும் இயக்கப்பட வில்லை.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்டிரைக்கால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சி.ஐ.டி.யு. சங்கத்திற்கு உட்பட்ட ஆட்டோக்கள் மட்டும் இயங்கவில்லை. மற்ற வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மேலும் கடைகளும் திறக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், லால்குடி, திருவெறும்பூர், துவாக்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருச்சி மாநகர பகுதியில் இன்று காலை வழக்கம்போல் திறக்கப் பட்ட கடைகள் காலை 10 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன.

    பெரியகடை வீதி, என். எஸ்.பி. ரோடு, மலைக்கோட்டை, மெயின்கார்டு கேட், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடின. அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.  #BharathBandh #PetrolDieselPriceHike 

    Next Story
    ×