search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
    X

    மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி ஏலமானது மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    அதன் அடிப்படையில் இந்தவாரம் மூலனூர் மற்றும் வேளாம்பூண்டி, சின்னமருதூர், கிளாங்குண்டல், வடுகபட்டி, கன்னிவாடி, பொன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிர்செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

    இந்த பருத்திகளை வாங்குவதற்காக அன்னூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், புஞ்சைப் புளியம்பட்டி, பல்லடம், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த வாரம் 247 விவசாயிகள் தங்கள் விளை நிளங்களில் விளைந்த பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

    இந்த வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச் முதல் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.6390-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.4500-க்கும் விற்பனை ஆனது. இந்த வாரம் மொத்த 2632-பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.

    இந்த தகவலை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலை செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.
    Next Story
    ×