search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி வியாபாரியிடம் ரூ.64 லட்சம் மோசடி - வியாபாரி கைது
    X

    அரிசி வியாபாரியிடம் ரூ.64 லட்சம் மோசடி - வியாபாரி கைது

    கோவை அரிசி வியாபாரியிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் கோகுல் யாதவ்(வயது 45). இவர் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் சுங்கம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்(43), இவரது தம்பி ரமேஷ்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.63 லட்சத்து 77 ஆயிரத்து 475-க்கு அரிசி மூட்டை வாங்கி உள்ளனர்.

    ஒரு மாதத்தில் அரிசிக்குரிய பணத்தை தந்து விடுவதாக கூறி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கோகுல் யாதவ் தொடர்ந்து பணம் கேட்டார். அப்போது சுரேஷ்குமாரும், ரமேஷ்குமாரும் சேர்ந்து ரூ.55 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளனர். அந்த காசோலையில் கையெழுத்து சரியாக இல்லை என வங்கி ஊழியர்கள் வாங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ரமேஷ்கு மாரை தொடர்பு கொண்டு கோகுல் யாதவ் பணத்தை கேட்டார். அப்போது இருவரும் அவரை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கோகுல் யாதவ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சுரேஷ்குமார், ரமேஷ் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×