search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
    X

    விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

    விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    விருத்தாசலம்:

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியையொட்டி இந்துக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பலவிதமான வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு வண்ணங்களில் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

    இதுகுறித்து மங்கலம்பேட்டையை சேர்ந்த விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், நாங்கள் களிமண், வண்டல்மண், ஆற்றுமணல், கிழங்கு மாவு கொண்டு இந்த விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். இதனை தண்ணீரில் கரைத்தால், நீர் நிலைகள் மாசுபடாது என்றார். 
    Next Story
    ×