search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து
    X

    நாங்குநேரி அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து

    நாங்குநேரி அருகே இன்று அதிகாலை கோழிப் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள திருவரமங்கைபுரத்தை சேர்ந்தவர் வேலு மனைவி சுப்புலெட்சுமி (வயது 48). இவர் அங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தற்போது பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள் விற்பனையானதால் கோழி வளர்ப்பு கூடம் காலியாக இருந்தது. புதியதாக கோழிக் குஞ்சுகள் வாங்கும் பணியில் சுப்புலெட்சுமி ஈடுபட்டிருந்தார். 

    இந்நிலையில் இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் இருந்து கரும் புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் தீ மள, மளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    இதையடுத்து வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணை செட் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கோழி தீவனங்கள் உள்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. 

     இதுபற்றி நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
    Next Story
    ×