search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லியில் பூஜை செய்வதாக நகை,பணம் மோசடி - போலி சாமியார் கைது
    X

    பூந்தமல்லியில் பூஜை செய்வதாக நகை,பணம் மோசடி - போலி சாமியார் கைது

    பூந்தமல்லியில் பூஜை செய்வதாக நகை மற்றும் பணம் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#arrest

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (60). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். 2-வது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதனால் மனவேதனையில் இருந்த வசந்தா மேல் மலையனூர் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு பாபு என்பவர் தான் சாமி யார் என்றும் குடும்ப பிரச்சினை தீர வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்றும் வசந்தாவிடம் கூறினார்.

    இதை நம்பிய வசந்தா சாமியார் பாபுவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது பூஜை செய்ய நகை-பணம் வேண்டும் என்று சாமியார் கூறினார்.

    இதையடுத்து வசந்தா வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது பூஜை செய்து கொண்டிருந்த சாமியார் நகை-பணத்துடன் மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் பாபுவை தேடி வந்தனர்.

    மேல்மலையனூரில் பதுங்கி இருந்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 பவுன் நகை மீட்கப்பட்டது. #arrest

    Next Story
    ×