search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழ வைத்த இயக்கத்தை வசை பாடுவது நியாயமா?- டிடிவி தினகரனுக்கு அதிமுக கேள்வி
    X

    வாழ வைத்த இயக்கத்தை வசை பாடுவது நியாயமா?- டிடிவி தினகரனுக்கு அதிமுக கேள்வி

    சி.பி.ஐ. சோதனையை சுட்டிக்காட்டி வாழ வைத்த இயக்கத்தை வசைபாடுவது நியாயமா? என்று டி.டி.வி தினகரனை கண்டித்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #ADMK #TTVDhinakaran #Sasikala
    சென்னை:

    அ.தி.மு.க. நாளேடான நமது அம்மாவில் டி.டி.வி.தினகரனுக்கு கேள்வி எழுப்பி கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றிலேயே வருமான வரித்துறை ஒரே நேரத்தில் 193 இடங்களில் சோதனை நடத்தியது உங்க பேமிலியில்தான்.

    அதே போல கட்சிக்கு தலைவர்களாக இருப்பவர்களில் கா.பி.போ.சா. சட்டத்தின் கீழ் சென்னை, கடலூர் என்று ஒரு வருடத்திற்கு மேலாக, சிறையிலிருந்த பெருமையும் உமக்கே உரியது.

    மேலும், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டு கண்டி‌ஷன் பெயிலில் இருந்து கொண்டு கட்சி நடத்துவதும், பிறருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதிப்பதும் நீங்க மட்டும்தான்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சித்தி, அத்தை, தம்பி என பலர் ஜெயிலிலும், தங்கை, தங்கை கணவர், தம்பி இவர்களோடு தாங்கள் பெயிலிலும் என இந்த நாட்டிலேயே, இவ்வளவு ஏன் இந்த உலகத்திலேயே ஒரு குடும்பமே குற்றவாளிகளின் நாற்றங்கால்களாக இருப்பதும் நீங்கதான்.


    ஆனால் இதற்கெல்லாம் நீங்க எந்த வகையில் உணர்ச்சியை காட்டுறீங்க. கூச்சமில்லாம, “நான், எங்க சித்தி எல்லோரும் அப்பவே ஜெயிலுக்குப் போனவங்க”... “ நான் லஞ்சம் கொடுத்ததற்காக திகார் சிறைக்குப் போனது கூட சின்னத்தை மீட்கத்தானே..”

    “என் மீதுள்ள வழக்கு எல்லாம், விதி மீறல்களே தவிர குற்றங்கள் கிடையாது”. இப்படியும் கூட கடுகளவு கூச்சமில்லாமல் கதாகாலட்சேபம் செய்து கட்சி நடத்தும் தாங்கள், சி.பி.ஐ. சோதனையை சுட்டிக்காட்டி வாழ வைத்த இயக்கத்தை வசைபாடுவது நியாயமா?

    சோதனைகள் நடைபெற்றாலே, ஒருவர் குற்றவாளி என்று சொன்னால், மத்திய ஆட்சியாளர்களின் காவல்துறையான சி.பி.ஐ.யை வைத்து இந்த நாட்டில் உள்ள மொத்த எதிர்க்கட்சிகளையும் குற்றவாளிகளாக்கி விட முடியுமே?

    அதனால், நீட்டி முழக்குவதால் நீங்க ஒரு நாளும் உத்தமனாக முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #TTVDhinakaran #Sasikala
    Next Story
    ×