search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் - அமைச்சர் தகவல்
    X

    தமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் - அமைச்சர் தகவல்

    உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
    உடுமலை:

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறையில் புதிதாக 854 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் கட்டமாக விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன.

    கறவைப்பசு வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கறவைப்பசுக்கள் இந்த மாதத்தில் வழங்கப்படும். விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.
    Next Story
    ×