search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிக்கடி இடையில் நிறுத்தப்படும் திருச்செந்தூர் ரெயிலால் தென்னக மக்கள் தவிப்பு
    X

    அடிக்கடி இடையில் நிறுத்தப்படும் திருச்செந்தூர் ரெயிலால் தென்னக மக்கள் தவிப்பு

    பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் இடையிலேயே நிறுத்தப்படுவதால் பக்தர்கள் மற்றும் தென்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர்.

    பழனி:

    பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரெயில் பொள்ளாச்சி வரையும், அதனைதொடர்ந்து பாலக்காடு வரையும் நீட்டிக்கபட்டது. அதன்படி தினசரி காலை 4.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் திருச்செந்தூர் ரெயில் 7.45 மணிக்கு பழனி வரும்.

    மாலை 4.30 மணியளவில் திருச்செந்தூர் செல்லும். இதன்மூலம் திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர் மாவட்ட மக்களும் பயனடைந்த வந்தனர்.

    சமீபகாலமாக இந்த ரெயில் மதுரை அல்லது கோவில்பட்டியோடு நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் திருச்செந்தூர் வரை செல்ல முடியாமல் பக்தர்கள் பஸ்சில் ஏறி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் காலை 10.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து வரும் பயணிகள் ரெயிலும் முறையாக இயக்கப்படுவது கிடையாது.

    தென்னக ரெயில்வே எப்போதும் தென்மாவட்ட மக்களை பற்றி அக்கறைஇல்லாத வகையில் செயல்படுவதாக புகார் வருகிறது.

    குறிப்பாக அதிகளவு பயணிகள் பயனடைந்து வரும் இந்த வழித்தடத்தில் அடிக்கடி முன்னறிப்பு இல்லாமல் ரெயில்சேவை நிறுத்தப்படுவது அவதியடைய வைத்துள்ளது. இதேநிலைய தொடர்ந்து திருச்செந்தூர் ரெயிலையே நிறுத்திவிடும் நிலையில் தென்னக ரெயில்வே முடிவு எடுத்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    எனவே திருச்செந்தூர் பயணிகள் ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×