search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைவாய்ப்பு அளிப்பதாக ஏமாற்றம்: சாகர்மாலா திட்டம் பெயரில் போலி இணையதளம் - மத்திய அரசு எச்சரிக்கை
    X

    வேலைவாய்ப்பு அளிப்பதாக ஏமாற்றம்: சாகர்மாலா திட்டம் பெயரில் போலி இணையதளம் - மத்திய அரசு எச்சரிக்கை

    வேலைவாய்ப்பு அளிப்பதாக சாகர்மாலா திட்டம் பெயரில் போலி இணையதள விளம்பரங்களை நம்பவேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #SagarMala
    சென்னை:

    மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேலை தேடும் நபர்களுக்கும், சாகர்மாலா திட்டத்தின் உண்மையான பங்குதாரர்களுக்கும் இ-மெயில் மூலம் http://sagarmala.org.in/ என்ற போலியான இணையதள முகவரி அனுப்பப்படுவதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன.

    இந்த போலி இணையதளம் சாகர்மாலா திட்டத்தின் உண்மையான இணையதளம் போல காட்சி அளிக்கிறது. பொறியாளர் மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்கள் குறித்த போலி விளம்பரம் அதில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுபோன்ற போலியான மற்றும் தவறான விளம்பரங்களை நம்பவேண்டாம். தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இது தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    சாகர்மாலா திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் http://www.sagarmala.gov.in/ என்பதே சாகர்மாலாவின் உண்மையான இணையதளம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SagarMala 
    Next Story
    ×