search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கம் அருகே அரசு பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
    X

    செங்கம் அருகே அரசு பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

    செங்கம் அருகே அரசு பஸ் இயக்காததை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செங்கம்:

    செங்கம் அடுத்த நாகபாடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகின்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகினறனர். கிராம பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரி தொடங்கும் நேரத்திற்கு முன்மும் கல்லூரி முடியும் நேரத்திலும் அரசு பஸ் இயக்கபடுவதில்லை.

    இதனால் மணவர்கள் பஸ் பாஸ் இருந்தும் தனியார் பஸ்களில் பணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாணவர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாகாபாடி, போளூர் செல்லும் சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளைம் போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×