search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கும் சகிப்புதன்மை வேண்டும்- நாராயணசாமி
    X

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கும் சகிப்புதன்மை வேண்டும்- நாராயணசாமி

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.

    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    Next Story
    ×