search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூரில் ஜவுளிக்கடையில் பணம்- ஆவணங்கள் திருட்டு - 2 பேர் கைவரிசை
    X

    குன்னூரில் ஜவுளிக்கடையில் பணம்- ஆவணங்கள் திருட்டு - 2 பேர் கைவரிசை

    குன்னூரில் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ஜவுளிக்கடையில் பணம் மற்றும் ஆவணங்களை திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதி யில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் நரேஷ்குமார். இவரது கடைக்கு நேற்று மாலை வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் துணி எடுக்க வந்தனர்.

    கடை உரிமையாளர் துணிகளை வரிசையாக எடுத்து வைத்தார். துணியின் டிசைன் பிடிக்கவில்லை. வேறு தாருங்கள் என்று அவர்கள் கேட்டனர். கடையில் வேறு ஊழியர்கள் இல்லாததால் அருகில் உள்ள குடோனுக்கு வேறு துணிகளை எடுத்து வர கடை உரிமையாளர் சென்றார்.

    அங்கு வேறு துணிகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார். கடையில் வந்து பார்த்தபோது துணிவாங்க வந்த வாலிபர்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் கல்லா பெட்டியை பார்த்தபோது அதில் இருந்து ரூ.30 ஆயிரம் பணம், ரேசன் கார்டு, பான் கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

    துணிவாங்க வந்த வடமாநில வாலிபர்கள் கைவரிசை காட்டியது குறித்து குன்னூர் போலீசில் நரேஷ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    முதல் கட்ட விசாரணையில் கைவரிசை காட்டியவர்கள் சுற்றுலா பயணிகள் அல்ல. இந்த பகுதியில் ஏதோ ஒரு கம்பெனியில் தங்கி வேலை செய்து வருபவர்கள் என்று தெரியவருவதாக போலீசார் கூறினர். ஜவுளிக் கடை, நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்துமாறு போலீசார் கடை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×