search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான பெண் யானையை படத்தில் காணலாம்.
    X
    பலியான பெண் யானையை படத்தில் காணலாம்.

    மேகமலை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை பலி

    மேகமலை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை பலியானது. பெண் யானை மின் கம்பியை துதிக்கையால் தட்டியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
    கூடலூர்:

    மேகமலை வன உயிரின சரணாலய பகுதிக்கு உட்பட்டது வெண்ணியாறு, இந்த பகுதி வழியாக சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்ட மின்பகிர்மான வட்டத்துக்கு உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 9 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து சரணாலய உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், கம்பம் கிழக்கு வனச்சரகர் துரை தினேஷ், கால்நடை மருத்துவர் செல்வம் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் பெண் யானை மின் கம்பியை துதிக்கையால் தட்டியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரிய வந்தது. இறந்த யானைக்கு 9 வயது இருக்கும் என கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை தனது 6 மாத குட்டியுடன் இதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே சரணாலயத்தினர் மின் கம்பி வடங்களை உயர்த்தி செல்லும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பெரும்பாலான மின்சார கம்பி வடங்கள் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் இல்லை. உணவு மற்றும் தண்ணீருக்காக இடம் பெயரும் போது இது போன்ற விபத்துகள் நடக்கின்றன. எனினும் இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Next Story
    ×