search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பனியன் நிறுவன பெண் சூப்பர்வைசரிடம் நகை பறிப்பு
    X

    திருப்பூரில் பனியன் நிறுவன பெண் சூப்பர்வைசரிடம் நகை பறிப்பு

    திருப்பூரில் பனியன் நிறுவன பெண் சூப்பர்வைசரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு கோயம்பாளையத்தை சேர்ந்தவர் உமாராணி (47). இவர் அவினாசி சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் இவர் தனது வீட்டிற்கு சாப்பிட வந்தார். மாலை 4 மணியளவில் மொபட்டில் பனியன் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென உமாராணி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    நகையை பறி கொடுத்த உமா ராணி சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப் பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது. அதில் வாலிபர் நகை பறிக்கும் காட்சி பதிவாகி இருக்கிறது.

    அதனை வைத்து நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 9 இடங்களில் நகை பறிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பெண்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×