search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மழை வெள்ளம்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் சரிவு
    X

    கேரளாவில் மழை வெள்ளம்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் சரிவு

    கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் முட்டை விற்பனை 20 சதவீதம் குறைந்து விட்டது. இதுபோன்ற காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 ரூபாய் 53 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மேலும் 20 காசுக்கள் குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்ணை முட்டையின் கொள்முதல் விலை 3 ரூபாய் 33 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வடமாநிலங்களில் ஸ்ராவண் பண்டிகை காரணமாக முட்டை விலை குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் முட்டை விற்பனை அங்கு பழைய நிலையை எட்ட வில்லை. அங்கு 20 சதவீதம் விற்பனை குறைந்து விட்டது. இது போன்ற காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைக்கப்பட்டது.

    மேலும், என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து பண்ணையாளர்கள் 50 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்வதாலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

    அதுபோல் ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.72 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.62 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×