search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நாட்டுக்கோழி வியாபாரம் சரிவு
    X

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நாட்டுக்கோழி வியாபாரம் சரிவு

    தொடர் பண்டிகை எதிரொலியால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நாட்டுக்கோழி வியாபாரம் சரிவுவை கண்டுள்ளது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிறுதோரும் கூடுகிறது. இச்சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் விலையக்கூடிய அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் மற்றும் ஆடு, மாடு, கோழி என விற்கப்படுகிறது. 

    அந்த வகையில் நாட்டுக்கோழி விற்பனையில் அதிக அளவு நாட்டுகோழிகள் தேக்கமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விலை கடும் சரிவை கண்டுள்ளது.

    கடந்த வாரங்களில் நாட்டுக்கோழி கிலோ ரூ.270 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த வாரம் கிலோ ரூ.180-க்கு வாங்க யாரும் முன்வரவில்லை என வியாபாரிகள் வருந்து கின்றனர். 

    இதுகுறித்து வியா பாரிகள் கூறியதாவது:-

    இந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பெரும்பாலான குடும்பத்தினர் அசைவத்தை தவிர்க் கின்றனர். அடுத்த வாரம் அமாவாசை, அதற்கு அடுத்தவாரம் விநாயகர் சதுர்த்தி வருகிறது. அதைத்தொடர்ந்து புரட்டாசி மாதம் வருவதால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு தொடர் பண்டிகை என்பதால் விலை சரிவு ஏற்படும். இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றார். 

    பெரும்பாலான விவசாயிகள் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்த்து ஞாயிறுதோரும் கூடும் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு 4 அல்லது 5 கோழிகளை எடுத்துவந்து விற்கின்றனர். 

    அந்த பணத்தில் வாரத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொட்களையும் சந்தையில் வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் விலை கடும் சரிவு கண்டுள்ளதால் அவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×