search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் அருகே ரேக்ளா பந்தய மாடுகளுக்கு எதிர் நீச்சல் பயிற்சி
    X

    கம்பம் அருகே ரேக்ளா பந்தய மாடுகளுக்கு எதிர் நீச்சல் பயிற்சி

    கம்பம் அருகே ரேக்ளா பந்தய மாடுகளுக்கு எதிர் நீச்சல் பயிற்சி, நடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், காமையகவுண்டன் பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை மாட்டு வண்டி என்னும் ரேக்ளா பந்தயம் நடைபெறும்.

    பல்வேறு வகை ரேக்ளா மாடுகளை இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு குழந்தைகள் போல வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் வளர்க்கப்படும் ரேக்ளா மாடுகள் தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்கும்.

    கோவில் திருவிழாக்களிலும் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் விழாக்களிலும் இது போன்ற ரேக்ளா பந்தயங்கள் நடைபெறும். இந்த பந்தயங்களில் பங்கேற்கும் மாடுகளுக்கு கம்பம் அருகே உள்ள மேற்கு மலையடிவார பகுதியான 18-ம் கால்வாய் செல்லும் ஏகலூத்து சாலை, கம்பம் மெட்டு மலைச்சாலை, புதுக்குளம் சாலை, மணிக்கட்டி ஆலமர சாலை உள்ளிட்ட சாலைகளில் நடைபயிற்சி, ஓட்டம், பாரம் இழுத்துச் செல்லுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது முல்லைப் பெரியாற்றில் 18-ம் கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ரேக்ளா மாடுகளுக்கு எதிர்நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாடுகளின் கழுத்து கயிறை பிடித்துக் கொண்டு ½ மணி நேரம் ஆற்று நீரில் எதிர் நீச்சல் அடிக்க மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன மூலம் ரேக்ளா மாடுகள் புத்துணர்வு பெறுவதுடன் பந்தயங்களில் கலந்து கொள்ளும் போது களைப்பு ஏற்படாமல் ஓடும் திறனை பெறுகிறது என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×